தனித்தீவில் நித்யானந்தாவின் லீலை...! விழி பிதுங்கும் போலீசார்!

பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சாமியார் நித்யானந்தா கரீபியன் தீவுகளில் ஒன்றை விலைக்கு வாங்கி அதை தனிநாடாக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 | 

தனித்தீவில் நித்யானந்தாவின் லீலை...! விழி பிதுங்கும் போலீசார்!

பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சாமியார் நித்யானந்தா கரீபியன் தீவுகளில் ஒன்றை விலைக்கு வாங்கி அதை தனிநாடாக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 நித்யானந்தாவின் முன்னாள் சிஷ்யையான கனடா நாட்டைச் சேர்ந்த சாரா லாண்ட்ரி, நித்யானந்தா தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாக பெங்களூரு போலீசில் புகாரளித்துள்ளார். மேலும், காமசூத்ரா புகைப்படங்களை அனுப்பி தன்னை வசப்படுத்த முயன்றதாகவும், ஆன்மீககத்தின் பெயரால் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இளம்பெண்கள் நித்யானந்தாவின் பாலியல் இச்சைக்குப் பலியாக்கப்பட்டதாகவும் பரபரப்பு புகார்களை கூறியுள்ளார். 

இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சாமியார் நித்யானந்தாவை போலீசார் வலைவீசி தேடி  வருகின்றனர். போலீசாரின் கைகளுக்கு சிக்காத சாமியார் பக்தர்களுக்கு அவ்வபோது, இணையதளம் வாயிலாக தரிசனம் கொடுத்து வருகிறார். ஆனால் இதுவரை அவர் எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், அவர் கரீபியன் கடல் பகுதியிலுள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாகவும், அதைத் கைலாசா என்ற தனிநாடாக அறிவிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதை இந்துமதத்தின் தலைநகராக அறிவித்து தன்னையும் இந்துமதத்தின் தலைவராக அறிவித்துக் கொள்ள இருக்கிறாராம் நித்யானந்தா. இதற்கான சட்டரீதியான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றை கேட்டு போலீசார் திக்குமுக்காடியுள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP