நித்யானந்தாவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

நித்யானந்தாவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது
 | 

நித்யானந்தாவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

குஜராத்தின் அகமதாபாத்தின் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தா நடத்தி வந்த ஆசிரமத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நித்யானந்தா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் தேடப்பட்டு வரும்  நிலையில் நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார்.

நித்யானந்தாவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது

இந்நிலையில் அந்த ஆசிரமம் சர்ச்சைக்குரிய பள்ளியை நடத்திவரும் கலோரெக்ஸ் அறக்கட்டளையிடம் இருந்து சட்டவிரோதமாக குத்தகைக்கு பெறப்பட்டுள்ளதாக ஆமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆணைய அதிகாரிகள் நேற்று அந்த ஆசிரமத்தை இடித்து தள்ளினர். உரிய சட்டப்படியும், காவல்துறைக்கும் கல்வித் துறைக்கும் தகவல் தெரிவித்துவிட்டு ஆசிரமம் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP