பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: 9 பேர் கைது!

பொள்ளாச்சியில் 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்: 9 பேர் கைது!

பொள்ளாச்சியில் 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 9 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குமரன் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த அமானுல்லா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறிது காலத்தில் இது காதலாக மாற, மாணவியை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார் அமானுல்லா. சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவரது நண்பர்கள் சிலர் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளனர். பின்னர் மாணவியை தனது நண்பர்களுடன் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தை வெளியில் கூறக்கூடாது என மிரட்டியதோடு, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சித்ரவதையை தாங்க முடியாத மாணவி பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அமானுல்லா உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அமானுல்லா, பகவதி, முகம்மது அலி, டேவிட் செந்தில், முகமது ரபீக், அருண் நேரு, சையத் முகமது, இர்ஷாத் முகமது, இர்ஷாத் பாஷா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பொள்ளாச்சியில் தொடர்ந்து இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது அப்பகுதியில் உள்ள மக்களிடையே  ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP