தமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

சென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

தமிழகத்தின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

சென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக வந்த தகவலையடுத்து கடந்த 14ஆம் தேதி சென்னை, நாகை உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில்  ஹசன் அலி, ஆரிஸ் முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி டெல்லி விரைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், பயங்கரவாத அமைப்புக்கு உதவியதாக 14 பேரை கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். இதையடுத்து 16 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்துள்ள தேசிய புலனாய்வு முகமை, இன்று அவர்களின் வீடுகளுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP