19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்! இன்றைய தின முக்கிய செய்திகளின் தொகுப்பு.... கமல்ஹாசன் பேட்டி முதல் சர்க்கார் அப்டேட் வரை...
 | 

19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

19-09-2018 இன்றைய தின முக்கிய செய்திகளின் தொகுப்பு.... கமல்ஹாசன் பேட்டி முதல் சர்க்கார் அப்டேட் வரை...

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் இல்லை: அப்போலோ மருத்துவமனை

19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிப்பதிவுகள் இல்லை என அப்போலோ நிர்வாகம் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. அதன்படி, " ஒரு மாதம் முதல் 45 நாட்கள் மட்டுமே சிசிடிவி காட்சிகளை சேமிக்க முடியும். சர்வரில் புதிய பதிவுகள் சேரும் போது பழைய பதிவுகள் தானாக அழிந்துவிடும். இதில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளும் அழிந்துவிட்டது" என அப்போலோ விளக்கம் அளித்துள்ளது. 

கேள்வி கேட்டால் தாக்குவது மாண்பு அல்ல: கமல்ஹாசன்

19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

தமிழிசையிடம் கேள்வி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மக்கள் நீதி ,மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், 'அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்பது மக்களின் ஜனநாயக உரிமை' என தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலை மீது காலணி வீச்சு: வழக்கறிஞர் ஜெகதீசன் குண்டாஸ் சட்டத்தில் கைது!

19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

பெரியார் சிலை மீது காலணி வீசிய வழக்கறிஞர் ஜெகதீசனை குண்டாஸ் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 17ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் தற்போது புழல் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.ராஜா மீது நடவடிக்கை: காவல் ஆணையரிடம் அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்!

19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

அறநிலையத்துறை ஊழியர்களை தவறாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். மேலும், கும்பகோணம் நீதிமன்றத்தில் எச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முத்தலாக் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் மசோதா தொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பப்படுகிறது. அவர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் உடனடியாக சட்டம் அமலுக்கு வரும். 

சர்வாதிகாரம் தொழிலாக மாறிவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் சர்வாதிகாரம் என்பது ஒரு தொழிலாக  மாறிவிட்டது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் பிலாஸ்பூரில் ஊழலை கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை போலீசார் சரமாரியாக தாக்கினர். மேலும் இதில் 52 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு குறைந்துள்ளது: ஐநா ஆய்வு

19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

2012ல் 22 சதவீதமாக இருந்த, ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், 2017ல் 18 சதவீதமாகக்  குறைந்துள்ளது என ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. 2017ல் 15 வயதிற்கு உட்பட்டோரின் இறப்பு, 63 லட்சமாக உள்ளது. அதில் 54 லட்சம் இறப்புகள் ஐந்து வயதிற்கு உட்பட்டக் குழந்தைகளுடையது. 

சர்கார் அப்டேட்: 24ம் தேதி சிங்கிள் டிராக் ரிலீஸ்

19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வரும் 24ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

ஐஎஸ்எல்: சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி அறிவிப்பு

19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

இந்தியன் சூப்பர் லீகின் ஐந்தாவது சீசன் போட்டி வருகிற 29ம் தேதி முதல் நடக்க இருக்கிறது. 12 சுற்றுகளில் 59 போட்டிகள் இடம் பெறுகின்றன. துவக்க போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

19-09-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

ஆசிய கோப்பையில் இன்றைய போட்டியில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 5-வது லீக் ஆட்டமான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி தொடங்கி  நடைபெற்று வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP