நியூ இயர் பார்ட்டி!  போதையில் சீண்டினால் கடும் நடவடிக்கை! பெண்களுக்கும் போலீசார் எச்சரிக்கை!

நியூ இயர் பார்ட்டி! போதையில் பெண்களை சீண்டினால் கடும் நடவடிக்கை! பெண்களுக்கும் போலீசார் எச்சரிக்கை!
 | 

நியூ இயர் பார்ட்டி!  போதையில் சீண்டினால் கடும் நடவடிக்கை! பெண்களுக்கும் போலீசார் எச்சரிக்கை!

புதிய வருடம் பிறப்பதற்கு இன்னும் 3 தினங்களே இருக்கின்றன. புத்தாண்டை வரவேற்க உலகமே பரபரப்பாக தயாராகி வரும் நிலையில், சென்னையிலும் புத்தாண்டை வரவேற்க பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்களும், சொகுசு பங்களாக்களும், பப்களும் தயாராகி வருகின்றன.  

நியூ இயர் பார்ட்டி!  போதையில் சீண்டினால் கடும் நடவடிக்கை! பெண்களுக்கும் போலீசார் எச்சரிக்கை!

புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் 31ந் தேதி இரவு இளைஞர்களும், கல்லூரி மாணவிகளும் செய்கிற அட்டகாசங்களைக் கண்காணிப்பது ஒவ்வொரு வருஷ இறுதியிலும் போலீசாருக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை போன்ற பகுதிகளிலும், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் நிரை போதையில் காதலர்களும், இளைஞர்களும் டூ வீலரிலும், காரிலும் செய்கிற சேட்டைகளைச் சொல்லி  மாளாது என்கிறார் காவல் துறை நண்பர் ஒருவர். 

நியூ இயர் பார்ட்டி!  போதையில் சீண்டினால் கடும் நடவடிக்கை! பெண்களுக்கும் போலீசார் எச்சரிக்கை!

நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை சாலை விடுதிகள், பண்ணை வீடுகளில் புத்தாண்டை முன்னிட்டு, டிசம்பர் 31ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். நட்சத்திர ஓட்டல்களில் அழகிகளின் நடனங்கள் உள்ளிட்ட ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என்று விடிய விடிய பார்ட்டி களை கட்டும். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பார்டிகளின் போது இளைஞர்கள் உற்சாக வெள்ளத்தில் பைக் ரேஸிலும், போதையில் வரம்பு மீறுவார்கள். அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் கிடையாது என்கிற ரீதியில் இளம் பெண்களும் இப்படி வரம்பு மீறுவது உண்டு என்கிறார் அந்த காவல்துறை அதிகாரி. 

நியூ இயர் பார்ட்டி!  போதையில் சீண்டினால் கடும் நடவடிக்கை! பெண்களுக்கும் போலீசார் எச்சரிக்கை!

புத்தாண்டு குதூகலமும், கொண்டாட்டமும் மகிழ்ச்சியை தருவதாக இருக்க வேண்டுமே தவிர, விபரீதங்களுக்கு காரணமாக அமைந்து விடக்கூடாது. உயிர் பலி ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் போலீசார் அதிக கவனமாக உள்ளனர். இதற்காக, பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.  சமீப காலங்களாய் ஐடியில் பணிபுரியும் பெண்கள், தனியே தங்கியிருப்பதால் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிகளவில் ஆண் நண்பர்களுடன் இரவு முழுவதும் இப்படி பார்ட்டிகளில் பங்கேற்பது அதிகரித்திருப்பதாகவும், இந்த முறை இப்படி குடித்து கும்மாளமடிக்கும் பெண்களுக்கும் கடும் தண்டனைகள் விதிக்கப்படும் என்கிற முடிவில் காவல் துறையினர் இருக்கிறார்களாம். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பெண்களிடம் சில்மி‌ஷம் செய்பவர்களை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியூ இயர் பார்ட்டி!  போதையில் சீண்டினால் கடும் நடவடிக்கை! பெண்களுக்கும் போலீசார் எச்சரிக்கை!

போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதுடன், கடும் அபராதம் விதிப்பதற்கு சென்னையில் மட்டும் 500க்கும் அதிகமான இடங்களில் வாகன தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. சொகுசு ஓட்டல்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP