பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடை!

அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில், புதிய ஆசிரியர் நியமனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.
 | 

பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடை!

அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில், புதிய ஆசிரியர் நியமனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உபரியாக உள்ள ஆசிரியர்களை கொண்டு நிரப்பிக்கொள்ள (பணி நிரவல்) பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசு உதவு பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர்களை தேர்வு செய்வர்.

இந்நிலையில், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்யக்கூடாது என்றும், பணி நிரவல் அடிப்படையில் மட்டுமே தேவைப்படும் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

மேலும், பள்ளிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு காலதாமதம் இன்றி உடனே அனுமதி வழங்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP