இனிவரும் பொதுத்தேர்வுகளுக்கு புதிய பாடத்திட்டங்களே! - தேர்வுகள் துறை இயக்குநர் தகவல்

இனிவரும் அரசு பொதுத் தேர்வுகளில் புதிய பாடத்திட்டத்தின்படி தான் கேள்விகள் இருக்கும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தெளிவுபடுத்தியுள்ளார்.
 | 

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தொடர்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த ஆண்டு 4 வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மீதமுள்ள 8 வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் புதிய பாடத்திட்டங்களின் படியே கேள்விகள் இருக்கும். கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்களும் வரும் பொதுத்தேர்வில் புதிய பாடத்திட்டங்களை தான் படிக்க வேண்டும். அவர்களுக்கு பழைய பாடத் திட்டங்கள் இப்படி கேள்விகள் இருக்காது. பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என அனைவருக்குமே இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP