சென்னைக்கு 3 புதிய மெட்ரோ ரயில்...! 

சென்னை நகர் முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை வழங்கும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. நகரின் விரிவாக்கத்தினால் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல்களைத் தவிர்க்கும் பொருட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவைகளுக்கு மக்களிடையே பெரிதும் வரவேற்பு கிடைத்துள்ளது.
 | 

சென்னைக்கு 3 புதிய மெட்ரோ ரயில்...! 

சென்னை நகர் முழுவதும் மெட்ரோ ரயில் சேவையை வழங்கும் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. நகரின் விரிவாக்கத்தினால் ஏற்பட்டுள்ள வாகன நெரிசல்களைத் தவிர்க்கும் பொருட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவைகளுக்கு மக்களிடையே பெரிதும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வண்ணாரப்பேட்டை  டூ திருவொற்றியூர் வழித்தடத்தில் இயக்குவதற்காக ஆந்திராவில் இருந்து 3 மெட்ரோ ரெயில்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்து 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ரூ.3,770 கோடி மதிப்பில் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கி.மீ. தூரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் இயக்குவதற்காக கூடுதலாக ரெயில்கள் தேவைப்படுகிறது. இதனால் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு கடன் உதவியுடன் ரூ.200 கோடி மதிப்பில் 10 மெட்ரோ ரெயில்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கடந்த ஆண்டு (2018) மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிறுவனத்துக்காக ஆந்திர மாநிலம் தடா அருகில் உள்ள ஸ்ரீ சிட்டியில் உள்ள உற்பத்தி மையத்தில் ரெயில்கள் தயாரிக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக அங்கு தயாரிக்கப்பட்ட 3 ரெயில்கள் 12 பெட்டிகளுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் பணிமனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP