சென்னையில் புதிய மேம்பாலங்கள்: முதல்வர் அறிவிப்பு

சென்னையில் 13 மேம்பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்கள், 2 நடைமேம்பாலங்கள், ஒரு ஆற்றுப் பாலம் அமைக்கப்படும். 18 பாலங்களின் பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ரூ.1,122 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த முதல்வர் பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறையில் 15 புதிய அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார்.
 | 

சென்னையில் புதிய மேம்பாலங்கள்: முதல்வர் அறிவிப்பு

சென்னையில் 13 மேம்பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்கள், 2 நடைமேம்பாலங்கள், ஒரு ஆற்றுப் பாலம் அமைக்கப்படும். 18 பாலங்களின் பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ரூ.1,122 கோடியில் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். நெடுஞ்சாலைத் துறையில் 15 புதிய அறிவிப்புகளை பேரவையில் அவர் வெளியிட்டார்.

மேலும், ‘9 மாவட்டங்களில் 32 இடங்களில் ஆற்றின் குறுக்கே உயர்நிலை பாலம் கட்ட ரூ.3.5 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். ரயில்வே மேம்பாலங்கள் 3 இடங்களில் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை ரூ.1.08 கோடி செலவில் தயாரிக்கப்படும். சாலைப் பாதுகாப்புப் பணிகள் ரூ.300 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்’ என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP