பள்ளி மாணவர்களுக்காக ஜூன் முதல் புதிய கல்வி சேனல் ஒளிபரப்பு

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்காக ஜூன் மாதம் முதல் புதிய கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்படுகிறது.
 | 

பள்ளி மாணவர்களுக்காக ஜூன் முதல் புதிய கல்வி சேனல் ஒளிபரப்பு

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்காக ஜூன் மாதம்  முதல் புதிய கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்படுகிறது. சுமார் 55 ஆயிரம் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேனல் தெரியும் வகையில் இணைப்பு வழங்கப்படுகிறது.

இந்த புதிய சேனல் மூலம், 1 முதல் +2 வரை பாடங்கள் மற்றும் கல்வி தொடர்பான தகவல்களை மாணவர்கள் ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும். பள்ளிகளில் புதியதாக டி.வி. பெட்டிகள் வாங்கவோ, ஏற்கெனவே உள்ள டி.வி.பெட்டிகளை சீர்செய்யவோ பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், அரசு கேபிள் நிறுவன அலைவரிசை எண் 200-ல் மாணவர்களும், மக்களும் வீடுகளில் இருந்தபடியும் பார்க்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP