பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் நாளை வெளியீடு!

தமிழகத்தில் 2018-19 கல்வியாண்டில் 1, 6, 9 மற்றும் 11- வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2019 - 20ம் கல்வியாண்டில் 2, 7, 10, 12ம் வகுப்பிற்கும், 2020-21ம் கல்வியாண்டில் 3,4, 5,8ம் வகுப்புகளுக்கும் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்படஉள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
 | 

இந்த சூழ்நிலையில் அடுத்த கல்வியாண்டிற்கும் சேர்த்தே நடப்பு ஆண்டில் அதாவது 2019 - 20ம் கல்வி ஆண்டில் மீதமுள்ள 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இப்பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடைந்த நிலையில் நாளை வெளியாகிறது. 

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுவதையடுத்து, இந்த புதிய பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு நாளை வழங்கப்பட இருக்கிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP