இன்று முதல் SBI ATMல பணம் எடுக்க செல்போனும் அவசியம்! மறந்துடாதீங்க!!

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கு, “ONE TIME PASSWORD“ (OTP)எனப்படும் ''ரகசிய எண் முறை'' ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 | 

இன்று முதல் SBI  ATMல பணம் எடுக்க செல்போனும் அவசியம்! மறந்துடாதீங்க!!

ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி, பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற நூதன திருட்டுக்களை தடுக்கும் விதமாக, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க, ரகசிய எண்ணை பயன்படுத்தும் முறையை, ஜனவரி 1ஆம் தேதி முதல் எஸ்பிஐ அறிமுகம் செய்ய உள்ளது. 

ஜனவரி 1 2020, அமுலுக்கு  வரும் முறை :-

  • ரூ.10ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் எடுக்க OTP கட்டாயம். 
  • பதிவுசெய்யப்பட்ட மொபைலுக்கு OTP அனுப்பப்படும்
  • இந்த OTP முறை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே அமலில் இருக்கும்
  • இந்த முறை எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ; 
  • இந்த முறை எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே செயல்படும்.வேறு வங்கி ஏடிஎம்களில் இத்திட்டம் பொருந்தாது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP