நீட் ஆள்மாறாட்டம்: தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆஜர்!

தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நீட் ஆள்மாறாட்டம் விவகாரம் குறித்த விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.
 | 

நீட் ஆள்மாறாட்டம்: தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆஜர்!

தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் நீட் ஆள்மாறாட்டம் விவகாரம் குறித்த விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். 

மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக உதித் சூர்யா என்ற மாணவன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் தொடர்புடைய உதித் சூர்யாவை கடந்த மூன்று நாட்களாக போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று மாலை திருப்பதி மலை அடிவாரத்தில் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், ஆள்மாறாட்டம் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக தேனி மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலத்தில், தேனி மருத்துவ கல்லூரி முதல்வர்  ராஜேந்திரன், கல்லூரி துணை முதல்வர் எழிலரசன் ஆகியோர் விசாரணைக்காக ஆஜராகினர். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP