நீட் ஆள்மாறாட்டம்: மாணவன் இர்ஃபான் கைது!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவன் இர்ஃபான் இன்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டான்.
 | 

நீட் ஆள்மாறாட்டம்: மாணவன் இர்ஃபான் கைது!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவன் இர்ஃபான் இன்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டான். 

மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வில் உதித் சூர்யா என்ற மாணவன் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் தேனி காவல்துறையினர் இது தொடர்பாக 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. உதித் சூர்யா ஏற்கனவே அவரது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆள்மாறாட்டம் செய்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த இர்ஃபான் என்ற மாணவனின் தந்தையை போலீசார் நேற்று கைது செய்த நிலையில், இன்று இர்ஃபானை சேலம் தீவட்டிப்பகுதியில் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இர்ஃபான் மற்றும் அவரது தந்தை இருவரையும் தேனி சிபிசிஐடி அலுவலத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளவுள்ளனர். 

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP