Logo

இஸ்ரோவின் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாசா!

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக நாசா அறிவித்துள்ளது.
 | 

இஸ்ரோவின் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது நாசா!

இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக நாசா அறிவித்துள்ளது. 

இந்தியா கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விக்ரம் லேண்டரை விண்ணுக்கு அனுப்பியது. ராக்கெட் சரியான பாதையில் சரியான தொலைவில் சென்ற நிலையில் இறுதி கட்டமாக செப்.7ஆம் தேதி நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் போது தகவல் தொடர்பை துண்டித்தது. பெரும் முயற்சியில் இவ்வாறு நடந்தது இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. நீண்ட நாட்கள் முயற்சி செய்து விக்ரம் லேண்டருடனான தொடர்பை சரி செய்ய முடியவில்லை. இந்தியாவின் முயற்சிக்கு நாசாவும் உதவியாக இருந்து விக்ரம் லேண்டாரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் இறங்கியது. இந்நிலையில், விக்ரம்.2 லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டறியப்பட்டதாக நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. 

 

 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP