நாராயணசாமியை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும்: எச். ராஜா ட்வீட்

கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மாநில சுயாட்சி தேவை என்றும் கிரண் பேடி தொல்லை தருகிறார் என்றும் பேசியது குறித்து பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 | 

நாராயணசாமியை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும்: எச். ராஜா ட்வீட்

கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியது குறித்து எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் "தெற்கில் உதித்தெழுந்த சூரியன்" என்ற தலைப்பில் கருணாநிதி குறித்து பேசினர். 

இதில் பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி, "முதல்வராக தமிழகத்தை கட்டிக் காத்தவர் கருணாநிதி. அவர் எல்லோரையும் ஈர்க்க கூடிய சக்தி வாய்ந்த பேச்சாளர். தமிழர்களுக்கு இன்னல் இழைக்கப்பட்டபோதெல்லாம் கருணாநிதியின் குரல் ஒலித்துள்ளது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், அடித்தட்டு மக்களுக்காக வாழ்ந்து காட்டியவர் கருணாநிதி. சமூக நீதியில் கொண்டிருந்த அசையாத நம்பிக்கையுடன் பெரியார் வழியில் வாழ்ந்து காட்டியவர். கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி.

கிரண்பேடி தரும் தொல்லையைப் பார்க்கும்போது மாநில சுயாட்சியை நாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதை உறுதியாக சொல்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள உரிமையை யாரும் பறிக்கக் கூடாது என்று போராடியவர் கருணாநிதி" என்று கூறினார்.

 

 

இதுகுறித்து பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "மாநில சுயாட்சி எனும் பிரிவினை கொள்கையை கொண்டுவர வேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் பேசியுள்ளார். மாநில சுயாட்சியை காங்கிரஸ் ஏற்கிறதா. காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் நாராயணசாமியை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP