பரோலில் வெளிவந்த நளினி மீண்டும் சிறையில் அடைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியான நளினி இன்று பரோல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
 | 

பரோலில் வெளிவந்த நளினி மீண்டும் சிறையில் அடைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியான நளினி இன்று பரோல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் தம்பதியரின் மகள் ஹரித்ரா. லண்டனில் தங்கியிருக்கும் ஹரித்ராவுக்கு திருமணம் செய்துவைக்க விரும்பிய நளினி பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகினார். இவரது கோரிக்கையை ஏற்று, பல்வேறு நிபந்தனைகளுடன் இவருக்கு 1 மாதம் பரோலில் வெளியே செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஜூலை 25 ஆம் தேதி வேலூர் பெண்கள் சிறைசாலையில் இருந்து வெளியே வந்த நளினி திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்கினார். 

ஈழத்தமிழர் ஒருவரைத்தான் தன் மகளுக்கு மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என விரும்பிய நளினி, மகள் லண்டனில் இருந்து வராததால் திருமண ஏற்பாட்டை தொடங்கவில்லை. இந்நிலையில் மேலும் 1 மாதம் பரோல் கேட்டு நளினி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் 3  வாரங்களுக்க பரோல் நீட்டிக்கப்பட்டது. 

இன்றுடன் பரோல் நிறைவடைந்த நிலையில், லண்டனில் உள்ள ஹிரித்ரா இதுவரை இந்தியா வரவில்லை. அவருக்கு திருமணத்தில் தற்போது விருப்பமில்லை என்றும், பெற்றோர்கள் விடுதலையான பிறகே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிகிறது. மகளின் திருமண ஏற்பாட்டிற்காக பரோலில் வந்த நளினி தனது ஆசை நிறைவேறாமல் மீண்டும் இன்று மாலை வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP