பரோலில் வெளியே வந்தார் நளினி!

வேலூர் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மகள் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.
 | 

பரோலில் வெளியே வந்தார் நளினி!

வேலூர் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மகள் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருபவர் நளினி. இவர் அவரது மகள் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் வெளியே செல்ல அனுமதியளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. 

அதன்படி, இன்று வேலூர் சிறையில் இருந்து நளினி பரோலில் வெளியே வந்தார். சத்துவாச்சாரியில் உள்ள சிங்கராயர் என்பவரது வீட்டில் நளினி தங்கவுள்ளார். இதனால் பலத்த பாதுகாப்புடன் சத்துவாச்சாரிக்கு அழைத்து செல்லப்பட்டார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP