கலைஞரின் மகளாக தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள்: கனிமொழி

தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கலைஞர் வாழ்த்து தெரிவித்தது போலவே, கலைஞரின் மகளாக தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள்; அவர் தூத்துக்குடி குறித்தும், அங்குள்ள மக்கள் குறித்தும் இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று கனிமொழி கூறியுள்ளார்.
 | 

கலைஞரின் மகளாக தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள்: கனிமொழி

தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கலைஞர் வாழ்த்து தெரிவித்தது போலவே, கலைஞரின் மகளாக தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள்; அவர் தூத்துக்குடி குறித்தும், அங்குள்ள மக்கள் குறித்தும் இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று கனிமொழி கூறியுள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் நாடு முழுவதுமே களைகட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக சார்பில், ஒருபக்கம் பிரதமர் மோடியும், மற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகத்தை பொறுத்தவரை திமுகவுடன் காங்கிரஸும், அதிமுகவுடன் பாஜகவும் கூட்டணி வைத்துள்ளன. இதில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசையும், திமுக சார்பில் கனிமொழியும் மோதுகின்றனர். இருவருமே இரண்டு தேசிய கட்சியின் முக்கிய பெண் தலைவர்கள் என்பதால் போட்டிக்கு பஞ்சமிருக்காது என்றே பேசப்படுகிறது. அதற்கேற்பவே இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

திமுக எம்.பி கனிமொழி ட்விட்டர் மூலமாகவும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். மக்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் வீடியோ வடிவில் அவர் பதிலளிக்கிறார். இதில் ஸ்டெர்லைட் பற்றிய தனது நிலைப்பாடு மற்றும் எதிரணி வேட்பாளர் தமிழிசை பற்றி பேசியுள்ளார். 

தமிழிசை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "தமிழிசை பாஜகவின் தலைவராக அறிவிக்கப்பட்ட போது தலைவர் கருணாநிதியை சந்திக்க விரும்பினார். அதன்படி கலைஞரை வந்து சந்தித்தார். அப்போது கலைஞர், "குமரி அனந்தனின் மகள், என் மகள் போன்றவர், அவர் அரசியலில் நன்றாக வர வேண்டும்" என தலைவர் கலைஞர் வாழ்த்தினார்.

அதேபோன்று கலைஞரின் மகளாக தமிழிசைக்கு எப்போதும் என் வாழ்த்துகள் உண்டு. இப்போதுதான் அவர் புதிதாக தூத்துக்குடி தொகுதிக்கு வந்திருக்கிறார்.  தூத்துக்குடி குறித்தும், அங்குள்ள மக்கள் குறித்தும் அவர் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும்" என பதில் அளித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP