முத்தலாக் புகார் அளித்த பெண் தீ வைத்து எரிப்பு!

கணவன் முத்தலாக் கூறி விவகாரத்து கொடுப்பதாக புகார் அளித்த பெண்ணை குடும்பத்தினர் தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
 | 

முத்தலாக் புகார் அளித்த பெண் தீ வைத்து எரிப்பு!

கணவன் முத்தலாக் கூறி விவகாரத்து கொடுப்பதாக புகார் அளித்த பெண்ணை குடும்பத்தினர் தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் சயீதா (22). இவருக்கு திருமணமாகி 5 வயதுடைய பெண் குழந்தை உள்ளது. மும்பையில் வசித்து வரும் கணவர் நவீஸ், சயீதாவுக்கு செல்போன் மூலம் 3 முறை தலாக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கடந்த 6ஆம் தேதி அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை கேட்ட போலீசார், வழக்கு பதிவு செய்யாமல் ஆகஸ்ட் 15ஆம் தேதி உத்தரப்பிரதேசத்திற்கு வந்த கணவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சயீதாவை அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு சென்ற சயீதா மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை வழக்கை விசாரிக்க சென்ற போலீசார் அவரது 5 வயது குழந்தையிடம் விசாரித்த போது, " சயீதாவை தனது தந்தை அடித்து முடியை பிடித்து இழுத்து சென்றதாகவும், தந்தையின் சகோதரிகள் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றியதையடுத்து தந்தையின் அம்மா, அப்பா ஆகியோர் தீ வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளது. 

இதையடுத்து, நவீஷ்  மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை, மற்றும் கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ஆகஸ்ட் 6 ஆம் தேதி அந்த பெண் அளித்த புகார் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP