முகிலன் காணாமல் போன விவகாரம்:  சென்னை காவல் ஆணையர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட எஸ்.பிக்கள் பதிலளிக்க உத்தரவு!

சுற்றுச்சுழல் செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் சென்னை காவல் ஆணையர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட எஸ்.பிக்கள் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

சுற்றுச்சுழல் செயற்பாட்டாளரும், ஸ்டெர்லைட் தீவிர எதிர்ப்பாளருமான முகிலன் சென்னையில் இருந்து மதுரை சென்றபோது காணாமல் போனார். 4 நாட்கள் ஆகியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மதுரை செல்லும் வழியில் திண்டிவனத்தில் அவர் மாயமாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், முகிலனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அஜர்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காவல் ஆணையர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட எஸ்.பிக்கள் ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு போலீஸ் தான் முழுக்காரணம் என்று முகிலன் ஆதாரங்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP