தாய், தந்தை, ஒன்றரை வயது குழந்தை என ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சோகம்.. விபத்து..

தாய், தந்தை, ஒன்றரை வயது குழந்தை என ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சோகம்.. விபத்து..
 | 

தாய், தந்தை, ஒன்றரை வயது குழந்தை என ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சோகம்.. விபத்து..

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.

திருச்சியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் அங்கு பொதுப்பணித்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் மகாராஷ்டிராவில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்றுவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். தமிழக எல்லையில் நுழைந்ததும் மிக மகிழ்ச்சியடைந்த அவர்கள் இன்னும் சில மணி நேரத்தில் வீட்டிற்கு சென்றுவிடுவோம் என எண்ணியிருந்தனர்.

தாய், தந்தை, ஒன்றரை வயது குழந்தை என ஒரே குடும்பத்தில் 5 பேர் பலியான சோகம்.. விபத்து..ஆனால் நடந்ததோ வேறு. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில்  புதுச்சத்திரம் அடுத்த ரெட்டிப்புதூர் அருகே முன்னால் சென்றுக் கொண்டிருந்த வாகனத்தை, இடது புறத்தில் அதிவேகமாக முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சமைப்பதற்காக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்னால் கார் மோதி விபத்துக்குள்ளானதில் சிவக்குமார், அவரது மனைவி தேவி பிரியா, ஒன்றரை வயது குழந்தை உட்பட ஐந்து பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். போக்குவரத்து விதிகளை மீறி சாலையோரம் லாரி நிறுத்தப்பட்டிருந்ததும் இடதுபுறமாக கார் முன்னேற முயன்றதுமே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP