வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி!

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். விதி 110ன் கீழ் முதல்வர் இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
 | 

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி!

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். விதி 110ன் கீழ் முதல்வர் இந்த புதிய நலத்திட்டத்தை அறிவித்துள்ளார். 

இதன்மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இந்த திட்டத்திற்காக ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பேரவையில் தெரிவித்துள்ளார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தான், மக்களை கவரும் நோக்கில் ஆளும் கட்சி இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு வருகிறது என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை கருத்தில் கொண்டு தான் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP