பணம் ஏற்றி வந்த கண்டைனர் லாரி பழுது!

ஆர்.பி.ஐ.,க்கு சொந்தமான பணத்தை, மைசூரில் இருந்து சென்னைக்கு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி பழுது ஏற்பட்டு, அமைந்தகரை சாலையில் நின்றதால், சற்று பரபரப்பு ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கான இருந்தனர்.
 | 

பணம் ஏற்றி வந்த கண்டைனர் லாரி பழுது!

பணம் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி பழுது ஏற்பட்டு, அமைந்தகரை சாலையில் நின்றதால், சற்று பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை அமைந்தகரையில் 2000 கோடி ரூபாய் பணத்தை ரிசர்வ் வங்கிக்கு கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று, நடுவழியில் டயர் பழுதாகி நின்றதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அமைந்தகரையில் உள்ள ஸ்கைவாக் மால் முன்பு நள்ளிரவு 12 மணியளவில் புனேவில் இருந்து சுமார் 2000 கோடி ரூபாய் பணத்தை ரிசர்வ் வங்கியில் சேர்ப்பதற்காக சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று டயர் பழுதாகி நடு வழியில் நின்றது. 

இதனை தொடர்ந்து அந்த கண்டெய்னரில் உள்ள பல கோடி பணத்தை பாதுகாக்கும் பொருட்டு லாரியை சுற்றிலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் பழுது சரிசெய்யப் படாததால் ராட்சச கிரைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, கண்டெய்னர் காவல்துறை பாதுகாப்புடன் பத்திரமாக ரிசர்வ் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது. ரிசர்வ் வங்கிக்கு பணம் கொண்டு சென்ற இரண்டு லாரிக்களில் ஒன்று பழுதாகி நடுவழியில் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP