மொபைல் டேட்டா கட்டணம் இந்தியாவில் தான் குறைவு

மொபைல் டேட்டா கட்டணம் இந்தியாவில் தான் குறைவு
 | 

மொபைல் டேட்டா கட்டணம் இந்தியாவில் தான் குறைவு

பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் கட்டணங்களை 50 சதவிகிதம் வரையில் உயர்த்தி அறிவித்துள்ளன. இலவச கால், டேட்டாக்களை வழங்கி வந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் வரும் 6ஆம் தேதி முதல் 40 சதவிகிதம் வரை கட்டணங்கள் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில், மொபைல் டேட்டா கட்டணங்கள் இந்தியாவில் தான் மிகக் குறைவாக இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், மற்ற நாடுகளில் ஒரு ஜிபி டேட்டாவிற்கு வசூல் செய்யப்படும் கட்டணங்கள் குறித்தும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மொபைல் டேட்டா கட்டணம் இந்தியாவில் தான் குறைவு

அதன்படி, இந்தியாவில் ஒரு ஜிபி மொபைல் டேட்டாவிற்கு 18 ரூபாய் 20 காசுகள் மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. ஆனால், ரஷ்யாவில் ஒரு ஜிபி டேட்டாவிற்கு 63 ரூபாய் 70 காசுகளும், இத்தாலியில் 121 ரூபாய் 10 காசுகளும், ஆஸ்திரேலியாவில் 172 ரூபாய் 90 காசுகளும்,பிரான்ஸில் 209 ரூபாய் 30 காசுகளும் வசூல் செய்யப்படுவதாக அமைச்சர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல், ஒரு ஜிபி டேட்டாவிற்கு பிரிட்டனில் 466 ரூபாய் 20 காசுகளும், ஜெர்மனியில் 487 ரூபாய் 20 காசுகளும், சீனாவில் 692 ரூபாய் 30 காசுகளும், அமெரிக்காவில் 865 ரூபாய் 90 காசுகளும் சுவிட்சர்லாந்தில் ஆயிரத்து 58 ரூபாய் 40 காசுகளும் கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP