எம்.எல்.ஏ., காலமானார்: சட்டசபையில் திமுகவின் பலம் குறைந்தது

விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 67
 | 

எம்.எல்.ஏ., காலமானார்: சட்டசபையில் திமுகவின் பலம் குறைந்தது

விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 67.

கடந்த சில வாரமாக உடல்நலக்குறைவு காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

2016 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் விழுப்புரம் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராதாமணி. அவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழக சட்டசபையில் திமுகவின் பலம் குறைந்துள்ளது.

 

மேலும், எம்.எல்.ஏ ராதாமணியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP