மு.க.ஸ்டாலின் தனது நிலைபாட்டில் இருந்து மாறுகிறார்: தங்கதமிழ் செல்வன்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறுவதாகவும், இது தவறு எனவும் அமமுக வேட்பாளர் தங்கதமிழ் செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்சியளித்த அவர், அமமுகவிற்கு ஆதரவு பெருகி கொண்டிருப்பதால், கோபம் காரணமாக தனது அறையில் சோதனை நடத்தியுள்ளதாக கூறினார்.  மேலும் மதுரையில் தான் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தியது தவறில்லை என குறிப்பிட்ட அவர், ஆளுங்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள அறையிலும் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறுகிறார். ஒரு தலைவர் தனது நிலைப்பாட்டை மாற்றி பேசுவது தவறு என கூறினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP