திருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருமுருகன் காந்தியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக, திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 | 

திருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திருமுருகன் காந்தியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ஐ.நா. சபையில் பேசி விட்டு திரும்பிய போது, கடந்த ஆகஸ்ட் 9 அன்று பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஐ.நாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கைது செய்யப்பட்ட அவரை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர். 

திருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். வயிற்று வலி, மூச்சுத் திணறல், அல்சர் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக்குறைவு பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் சிறையில் அவருக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என வெளியே வந்ததும் அவர் தெரிவித்திருந்தார். '

இதையடுத்து கடந்த 1ம் தேதி எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் அவருக்கு ஜாமீன் வழங்கின. தொடர்ந்து அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,  திருமுருகன் காந்தியை இன்று காலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக, திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP