28 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

டி.என்.பி.எஸ்.சி மூலம் துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 28 நபர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
 | 

28 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

டி.என்.பி.எஸ்.சி மூலம் துணை ஆட்சியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 28 நபர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பணிநியமன ஆணைகளை இன்று வழங்கினார். 

தமிழகத்தில் காலியாக இருந்த 28 துணை ஆட்சியர் பணியிடங்களுக்கான தேர்வு டி.பி.எஸ்.சி மூலம் நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், 28 துணை ஆட்சியர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை  தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வில், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரான சத்தியகோபால், வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, மறுவாழ்வு மற்றும் புத்துயிர் திட்ட இயக்குனர் ஜெகநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் லட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP