அமமுக கட்சியே அல்ல, அதில் உறுப்பினர்களும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஒரு கட்சியே அல்ல என்றும் அதில் உறுப்பினர்களே கிடையாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 | 

அமமுக கட்சியே அல்ல, அதில் உறுப்பினர்களும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஒரு கட்சியே அல்ல என்றும் அதில் உறுப்பினர்களே கிடையாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார். 

காயிதே மில்லத்தின் 124 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு  சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், சேவூர் ராமச்சந்திரன், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ,  துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், கே.சி.கருப்பண்ணன், ராஜலட்சுமி,  சரோஜா, முன்னாள் அமைச்சர் வளர்மதி  ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்கரை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  ரமலான் மற்றும் காயிதே மில்லத் பிறந்தநாள் ஒரே நாளில் வந்துள்ளதால், இன்றைய நாள் மிகவும் சிறப்புக்குரிய நாளாக பார்ப்பதாக தெரிவித்தார். 

டி.டி.வி தினகரன் ஸ்லீப்பர் செல் என்று பேசிக்கொண்டே உள்ளார், ஆனால் நிறைய தொண்டர்கள் மீண்டும் அதிமுக கட்சியில் இணைந்து வருகின்றனர். அமமுக ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு குழு. டி.டி.வி தினகரன் கட்சியில் உறுப்பினர்களே கிடையாது, ஆகையால் அவரால் கட்சியை வழிநடத்தவும் முடியாது என்று கூறினார். 

மேலும், இஸ்லாமியர்களுக்கு நடந்து முடிந்த தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அனைவருக்கும் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார். 

அதேபோல், கூடங்குளத்தில் அணுக்கழிவுகள் தேக்கி வைப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகின்றது.  மக்கள் தங்கள் கருத்தை இந்த கூட்டத்தில் தெரிவிக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP