மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்சியாகவும் உள்ளது.
 | 

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கும் வரும் நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியில் இருந்து 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 16,239 கன அடியில் இருந்து 25000 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்றிரவு அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 

தற்போது அணையில் இருந்து 22,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 350 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்சியாகவும் உள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP