மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு !

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24,021 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.610 அடியாகவும், நீர் இருப்பு 92.851 டி.எம்.சியாகவும் உள்ளது.
 | 

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு !

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24,021 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 14,784 கன அடிநீர் வந்துக்கொண்டிருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து 24,021 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம்  119.610 அடியாகவும், நீர் இருப்பு 92.851 டி.எம்.சியாகவும் உள்ளது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP