ஈரோடு, சேலத்திற்கு மெமு ரயில்கள் இயக்கம் 

கேரள மாநிலம் எர்ணாகுளம், பாலக்காட்டில் இருந்து ஈரோட்டிற்கும் சொர்ணூரில் இருந்து சேலத்திற்கும் புதிய மெமு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ஈரோடு, சேலத்திற்கு மெமு ரயில்கள் இயக்கம் 

கேரள மாநிலம் எர்ணாகுளம், பாலக்காட்டில் இருந்து ஈரோட்டிற்கும் சொர்ணூரில் இருந்து சேலத்திற்கும் புதிய மெமு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ரயில்களுக்கு பதிலாக மெமு என்று அழைக்கப்படும் புதிய ரக ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த மெமு ரயிலில் அனைத்து பெட்டிகளிலும் ஜிபிஎஸ் கருவி, கண்காணிப்பு கேமிரா, எல்இடி, லைட், பயோ டாய்லெட் வசதிகள் உள்ளதாகவும், 614 இருக்கைகள் உள்ள ரயிலில் 1,788 பேர் பயணம் செய்யலாம் என்றும் பாலக்காடு ரயில்வே கோட்ட மேலாளர் பிரதாப் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

மெமு ரயில் என்பது குறுகிய மற்றும் நடுத்தர தூர பாதைகளுக்கு இயக்கப்படும் ரயில்கள் ஆகும். நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் லோக்கல் ரயில் போன்றது இந்த மெமு ரயில்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP