ஜெ’வுடனான சந்திப்பு! ரகசியம் உடைத்த சீமான்!

ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஜெயலலிதாவுடனான நீங்காத நினைவுகளை பற்றி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
 | 

ஜெ’வுடனான சந்திப்பு! ரகசியம் உடைத்த சீமான்!

ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஜெயலலிதாவுடனான நீங்காத நினைவுகளை பற்றி பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், சென்னை விமான நிலையத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜெயலலிதாவுடனான சந்திப்பை குறித்து பகிர்ந்தார். அதில், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி, சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்தேன்.

அப்போது, ஜெயலலிதா என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார். அந்த நினைவுகள் நீங்காமல் உள்ளது. மேலும்,  ஈழம் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து நிறைய பேசினார்கள். ஹிலாரி கிளின்டன் தன்னை சந்தித்த போது 45 நிமிடம் ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசியதாக ஜெயலலிதா தெரிவித்ததாகவும் கூறினார்.

 நாட்டின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வராமல் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எல்லாரும் சேர்ந்து போராடி வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என ஜெயலலிதா தெரிவித்ததாகவும், ஜெயலலிதாவிற்கு தன்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துவதாகவும் தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP