நாளை மறுநாள் சென்னை வருகிறார் மாயாவதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி வருகிற 10ம் தேதி சென்னை வருகிறார். தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்துவைக்கிறார். மேலும், அவரது தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 10ம் தேதி மாலை பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.
 | 

நாளை மறுநாள் சென்னை வருகிறார் மாயாவதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, நாளை மறுநாள் (ஏப்ரல் 10) சென்னை வருகிறார்.

தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைக்கிறார். மேலும், அவரது தலைமையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. 

இந்தக் கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், எம்.பிக்கள், மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து மாயாவதி, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்ய இருக்கிறார். பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP