ஜியோவை முறியடிக்க மாஸ்டர் பிளான்! இணைந்தது வோடொபோன் ஐடியா!!

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடோபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து வோடோபோன் ஐடியா லிமிடடாக களமிறங்கியுள்ளது.
 | 

ஜியோவை முறியடிக்க மாஸ்டர் பிளான்! இணைந்தது வோடொபோன் ஐடியா!!

நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடோபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து வோடோபோன் ஐடியா லிமிடடாக  களமிறங்கியுள்ளது. 

வோடோபோன் நிறுவனத்தின் இந்திய பிரிவை ஐடியாவுடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை பல மாதங்களாகவே நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று இரு நிறுவனங்களை இணைக்கும் ஒப்பந்தம் தொடர்பான பணிகள் முடிவடைந்தன. இந்த இணைப்பு மூலம் ஐடியா மற்றும் வோடோபோனின் வாடிக்கையாளர்கள் ஒன்றாக இணைவர். இதனால் இரு நிறுவனங்களின் வருவாய் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது. இதன்படி இரு நிறுவனங்களின் மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1.6 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இரு நிறுவனங்கள் இணைந்ததும் சுமார் 43 கோடி வாடிக்கையாளர்களுடன் டெலிகாம் சந்தையின் 35% பங்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. என கணக்கிடப்பட்டது.தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோவின் போட்டியை சமாளிப்பதற்காக வோடோபோன் ஐடியா அவதாரம் எடுத்துள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP