2020 ஒலிம்பிக்கில் மேரிகோம் தேர்வு! சவால் விட்டவரை வீழ்த்தி சாதனை!

2020 ஒலிம்பிக்கில் மேரிகோம் தேர்வு! சவால் விட்டவரை வீழ்த்தி சாதனை!
 | 

2020 ஒலிம்பிக்கில் மேரிகோம் தேர்வு! சவால் விட்டவரை வீழ்த்தி சாதனை!

இந்தியவின் மேரி கோம் (36) குத்துச்சண்டை போட்டியில் இதுவரையில், உலக சாம்பியன்ஷிப்பில் 6 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றவர். ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்காக தற்போது டெல்லியில் நடந்து வரும் போட்டியில் மேரிகோம் வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்,

2020 ஒலிம்பிக்கில் மேரிகோம் தேர்வு! சவால் விட்டவரை வீழ்த்தி சாதனை!

முன்னதாக, மேரிகோம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக 48 கி.கி., எடைப் பிரிவில் இருந்து 51 கி.கி., எடைப் பிரிவுக்கு மாறினார். இந்த எடைப் பிரிவில் ஏற்கெனவே சாதித்து வரும் தெலுங்கானா வீராங்கனை நிகாத் ஜரீன் (23) இதற்கு  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

தனக்கும், மேரி கோமுக்கும் இடையே போட்டி வைத்து, அதில் வெல்பவரையே  ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கையும் வைத்திருந்தார் ஜரீன்.

2020 ஒலிம்பிக்கில் மேரிகோம் தேர்வு! சவால் விட்டவரை வீழ்த்தி சாதனை!

ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகள் சீனாவில் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. டெல்லியில் நடக்கும் குத்துச் சண்டை தேர்வு முகாமில் நேற்று பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 51 கி.கி., எடைப் பிரிவில் மேரி கோம், சக வீராங்கனை ரிது கிரேவலை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.  51 கிலோ எடைப் பிரிவில் 23 வயதான நிஹாத் ஸரினை தோற்கடித்தார் மேரி கோம். டெல்லியில் நடைபெற்ற இறுதி போட்டியில், 9-1 என்ற புள்ளிக்கணக்கில் மேரி கோம் வெற்றிப் பெற்றார். 2020ல் நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மேரி கோம் நேரடியாக தோ்வு செய்யப்பட்டார் என  இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவா் அஜய் சிங் மகிழ்ச்சி பொங்க அறிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP