பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!!

திருச்சி : பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் பல மாதங்களாக முகநூல் மூலம் தொடர்பில் இருந்து வந்த சர்புதீன் மற்றும் அவரது உறவினர் ஜாஃபர் இருவரையும் போலீசார் உதவியுடன் என்.ஐ.ஏ குழுவினர் இன்று கைது செய்துள்ளனர்.
 | 

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!!

திருச்சி : பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் பல மாதங்களாக முகநூல் மூலம் தொடர்பில் இருந்து வந்த சர்புதீன் மற்றும் அவரது உறவினர் ஜாஃபர் இருவரையும் போலீசார் உதவியுடன் என்.ஐ.ஏ குழுவினர் இன்று கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்ட எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ் நகரில் வசித்து வருபவர் சர்புதீன். அவ்வப்போது அரபு நாடுகளுக்கு சென்று பணியாற்றி வரும் இவர், பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா அமைப்பின் முகநூல் கணக்கில் இணைந்து அல்கொய்தா அமைப்பினர் வெளியிடும் கருத்துக்களுக்கு பதில் அளிப்பதும், ஆவணங்களை டவுன்லோட் செய்வதும் லைக் செய்வதுமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இதை அறிந்த தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர், இது தொடர்பாக, கடந்த ஒரு மாத காலமாக சர்புதீன் முகநூல் கணக்கை கண்காணித்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் கேரள டி.எஸ்.பி ஜார்ஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் திருச்சி மாநகர போலீசார் துணையுடன் இன்று திருச்சியின் கே.ஆர்.எஸ் நகரில் உள்ள சர்புதீன் வீட்டிற்கு 5 மணியளவில் வந்த என்.ஜ.ஏ அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து, சர்புதீனின் குடும்ப உறுப்பினர்களிடமும் இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சர்புதீனின் உறவினரான ஜாஃப்ர என்பவரும் அல்கொய்தா அமைப்பினருடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதை தொடர்ந்து, வீட்டிலிருந்து செல்போன், பென் ட்ரைவ் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றிய என்.ஐ.ஏ அமைப்பினர், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இருவரையும் கைது செய்தனர். என்.ஐ.ஏ அமைப்பினரின் இந்த திடீர் சோதனையும், இருவரின் கைதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP