ஹெச்.ராஜா மீதான மனுஷ்யபுத்திரன் புகார்: காவல்துறை நடவடிக்கைக்கு கி.வீரமணி வலியுறுத்

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவால் தனது உயிருக்கு ஆபத்து என கவிஞர் மனுஷ்யபுத்திரன் அளித்திருக்கும் புகார் மீது தமிழக காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
 | 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒரு கவிதைக்கு மத உள்நோக்கம் கற்பித்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் விடுவது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக பா.ஜ.கவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா இழிவான வார்த்தைகளை உதிர்ப்பது அவர் சார்ந்த கட்சிக்குப் பெருமை உடையதாக இருக்கலாம். ஆனால் பொது வெளியில் கண்டிக்கத்தக்கது.

என்னைக் கொல்ல விரும்புகிறார்கள். எனக்கு ஏற்படும் எந்த அபாயத்திற்கும் அவர்தான் பொறுப்பு என்று வெளிப்படையாகவே மனுஷ்யபுத்திரன் கருத்து கூறியுள்ளார். இதனைக் காவல்துறை அலட்சியப்படுத்தாமல் ஊடகப் பெண்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகர் விஷயத்தில் காவல்துறை நடந்து கொண்ட தவறான அணுகுமுறையை பின்பற்றாமல், தமிழகம் அறிந்த கவிஞர் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்பது அசாதாரணமானது. காவல்துறை விரைந்து செயல்படுதல் அவசியம்” என வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP