மதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கும், காவலர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலை தொடர்ந்து சிறைச்சாலையின் மதில்சுவர் மீது ஏறி கைதிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

மதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கும், காவலர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலை தொடர்ந்து சிறைச்சாலையின் மதில்சுவர் மீது ஏறி கைதிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைச்சாலையில் இன்று பிற்பகல் சரியாக 3 மணி அளவில் திடீரென காவல்துறையினருக்கும், கைதிகளுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது.

அதாவது மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் உணவுகள் சுத்தமாக இல்லை என்றும் குடிநீர் வசதிகள் முறையாக ஏற்படவில்லை என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மத்திய சிறையில் அலுவலரிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை கொடுத்தும் எந்த ஒரு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் திடீரென மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை சுற்றி உள்ள சுவற்றின் மீது ஏறி நின்று கண்டன கோஷங்களை எழுப்பி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைதிகளை கூட்டமாக கலைக்க மேற்பட்ட காவல்துறையினர் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,

இதனால் மதுரை மத்திய சிறை செல்லும் பிரதான சாலை முழுவதும் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கைதிகள் தங்களுடைய பிரதான பிரச்னைகளை ஏதேனும் ஒரு நீதிபதி நேரில் வந்து விசாரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து எங்களை துன்புறுத்தி வந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP