சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை!

சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
 | 

சென்னை: ஐஐடி மாணவியின் தந்தையிடம் விசாரணை!

சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலையில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணத்திற்கு பேராசிரியர் காரணம் என மகள் செல்போனில் தகவல் தெரிவித்திருப்பதாகவும் மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார். மேலும், மாணவியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கேரளா இல்லத்தில் தங்கியுள்ள மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்பிடம், மாணவி மொபைலில் இருந்த தகவல்கள் எப்படி கிடைத்து என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. 

Newstm.in 
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP