சந்திர கிரஹணம்: என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது!

சந்திர கிரஹணத்தை காண பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிர்லா கோளரங்க இயக்குநர் செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

சந்திர கிரஹணம்: என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது!

இன்று நிகழும் சந்திர கிரஹணத்தை காண, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கோளரங்கத்தில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பூமி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வே கிரஹணம் எனப்படுகிறது. பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வே சந்திர கிரஹணம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சந்திர கிரஹணம், இன்று நள்ளிரவு துவங்கி நாளை அதிகாலை வரை நடைபெறுகிறது. நம் நாட்டில் நாளை அதிகாலை 1.31 மணிக்கு தொடங்கி காலை 4.30 மணி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பொதுவாக சூரிய, சந்திர கிரஹணங்களை வேறும் கண்களால் பார்க்கக்கூடாது என்பர். கதிர்வீச்சு அபாயத்தில் கண் பார்வை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் அவ்வாறு எச்சரிப்பது வழக்கம். எனினும் இந்த சந்திர கிரஹணத்தை வெறும் கண்களால் காணலாம் என பிர்லா கோளரங்க இயக்குநர் செளந்தரராஜன் அறிவுறித்தியுள்ளார். அதே போல் கிரஹண காலத்தில் உணவு அருந்தினால் உணவு செரிப்பதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கிரஹண காலத்திற்க்கு 4 மணி நேரம் முன்பாகவே உணவு அருந்தி முடிப்பது நல்லது.

எனினும் இம்முறை, நள்ளிரவு தண்டி கிரஹணம் ஏற்படுவதால் வழக்கமாய் நேரப்படி இரவு 10 மணிக்குள் உணவு அருந்தலாம் உணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP