சுபஸ்ரீ-க்கு இரங்கல் தெரிவித்ததுடன் உறுதிமொழி எடுத்த லாரி உரிமையாளர்கள்!

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம்; விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று தண்ணீர் லாரி உரிமையாளர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
 | 

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம் பொறியாளரான சுபஸ்ரீ, கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வேலை முடிந்து அவர் பள்ளிக்கரணை வழியாக வீடு திரும்பியபோது, சாலையில் டிவைடர் மீது வைக்கப்பட்டிருந்த பேனர் ஒன்று காற்றில் பறந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதனால் சுபஸ்ரீ தடுமாறி கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விவகாரம் குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 'லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம்; விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்' என்று அவர்கள் உறுதி மொழி எடுத்து உள்ளனர்.

மேலும், உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP