உள்ளாட்சித் தேர்தல்! முக ஸ்டாலின் திடீரென கலைஞர் சமாதியில் அஞ்சலி!

உள்ளாட்சித் தேர்தல்! முக ஸ்டாலின் திடீரென கலைஞர் சமாதியில் அஞ்சலி!
 | 

உள்ளாட்சித் தேர்தல்! முக ஸ்டாலின் திடீரென கலைஞர் சமாதியில் அஞ்சலி!

திமுக சார்பில் முக்கிய நிகழ்வுகளில் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் இன்று உள்ளாட்சித் தேர்தலில் முதன் முதலில் வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் நேற்றிரவு திமுக தலைவர் ஸ்டாலின் தனியாக காரில் வந்து தனது தந்தை கலைஞர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார்.

இரவு 8 மணிக்குமேல் திடீரென அவர், கலைஞரின்  சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார். உடன் துரைமுருகன் தவிர கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லை. ஸ்டாலின் வரும் தகவல் போலீசாருக்கும் தெரியாது. இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது, பொதுவாக ஸ்டாலின் மாதா மாதம் தனது தந்தை மறைந்த 7 மற்றும் அடக்கம் செய்யப்பட்ட 8 தேதிகள் என்று இந்த இரு தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில், சென்னையில் இருந்தால் கட்டாயம் வந்து வணங்கி விட்டு, சிறிது நேரம் அமர்ந்து விட்டுச் செல்வார்.

ஒரு வேளை அந்தத் தேதியில் ஊரில் இல்லாவிட்டால் அதற்கு முன்னரே வந்து வணங்கி விட்டுச் செல்வார். ஆகவே அவர் திடீரென வந்தது எங்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலும் அப்படித் தான் திடீரென வந்து வணங்கி விட்டுச் செல்வார் என்றனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP