உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்பட வாய்ப்பு: மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாகவே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்பட வாய்ப்பு: மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாகவே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

உள்ளாட்சித் தேர்தல் குறித்து கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்றது. இதில், உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள ஊழியர்கள் பட்டியலை மாவட்ட நிர்வாகம் விரைந்து சமர்பிக்க அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தேதி டிசம்பர் 2வது வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசாணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கோரியுள்ளனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாகவே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.  

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP