நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்?

தமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
 | 

நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்?

தமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் நடைபெறவேண்டிய உள்ளாட்சி தேர்தல் ரத்தானதை தொடர்ந்து இதுவரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், தற்போது, நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை கர்நாடகா, பீகார் மாநிலங்களில் இருந்து வாங்க முடிவு செய்திருப்பதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் நிலையில் வைக்கும் பணி அக்.15ல் முடிவடையும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP