டிச.27, 30 ல் உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிச.,27 மற்றும் டிச.,30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 | 

டிச.27, 30 ல் உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிச.,27 மற்றும் டிச.,30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் டிச.,13 ம் தேதிக்குள் தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் பழனிசாமி, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிச.27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். மேலும், வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கி டிசம் 13தேதி நிறைவடைகிறது. வேட்பு மனுவை திரும்பபெற டிச.18 கடைசி நாள் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP