குழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை!

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது.
 | 

குழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை!

திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை பெய்து வருகிறது.

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். 18 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போது அப்பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது. தற்சமயத்திற்கு குழந்தை இருக்கும் ஆழ்துளை கிணற்றின் மேல் மழை நீர் விழாதவாறு டார்ப்பாள் கட்டப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது, கமாண்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் 20 பேர் கொண்ட மாநில பேரிடம் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். நவீன கருவிகள் மூலம் குழந்தை மீட்க போராடி வருகின்றனர். மேலும், 4 மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 7 மீட்புக்குழுவினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP