சுசி லீக்ஸால் வாழ்க்கையே போச்சு! மனம் திறந்த சுசித்ரா!

சுசி லீக்ஸால் டைவர்ஸ் ஆனது. அதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன் என்று பாடகி சுசித்ரா மனம்திறந்து பேசியுள்ளார்.
 | 

சுசி லீக்ஸால் வாழ்க்கையே போச்சு! மனம் திறந்த சுசித்ரா!

சுசி லீக்ஸால் டைவர்ஸ் ஆனது. அதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன் என்று பாடகி சுசித்ரா மனம்திறந்து பேசியுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில், சுசிலீக்ஸ் என்ற பெயரில் பிரபல நடிகர், நடிகைகளின் அந்தரங்க வீடியோ, பலான போட்டோக்கள் வெளியாகி தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால், சுசித்ரா மீது திரையுலகினர் பலர் கடுப்பில் இருந்தனர். சுசித்ரா மனநிலை சரியில்லாததால், அவர் இவ்வாறு எல்லாம் செய்கிறார் என்றனர். சுசித்ராவும் தன்னுடைய ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸிடம் புகார் கொடுத்தார்.

சுசி லீக்ஸால் வாழ்க்கையே போச்சு! மனம் திறந்த சுசித்ரா!

இந்த சம்பவங்கள் முடிந்து சில காலம் வெளியில் தெரியாமல் இருந்த சுசித்ரா, சில வாரங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார் என்று அவரது தங்கை போலீசிடம் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில் மேலே உள்ள அனைத்திற்கும் பாடகி சுசித்ரா மனம்திறந்து பேட்டியளித்துள்ளார். அதில், 4.5 லட்சம் பேர் பின் தொடரும் என் ட்விட்டர் பக்கத்தை யாரோ தவறாக பயன்படுத்தியதால் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டு, அதனால் நான் மனஅழுத்தத்திற்கு ஆளானேன். அதே நேரத்தில் எனக்கு டைவர்ஸ் ஆனதால் மன அழுத்தத்தில் மொத்தமாக தள்ளப்பட்டேன்.

இதிலிருந்த விடுபட லண்டனுக்கு சென்று பிரெஞ்ச் குக்கிங் கற்றுக்கொண்டு வந்துள்ளேன். அதை யூடியூபில் ‘சுசிகுக்’ என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்டு, சுசி லீக்ஸ் என்று கிளப்பிவிட்டவர்கள் மத்தியில் அவர்கள் மூக்கில் குத்துவது போல  இந்த பெயரை பயன்படுத்தவுள்ளேன்’என்றார்.

மேலும், சொத்துபிரச்னை காரணமாக தனது தங்கை காணாமல் போனதாக புகார் அளித்ததாகவும் சுசித்ரா தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP